புரோ வாலிபால் 2ம் கட்டம் சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: புரோ வாலிபால் தொடரின் 2ம் கட்டப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது. ஐபிஎல், ஐஎஸ்எல், புரோகபடி போன்று புரோ வாலிபால் தொடர் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்பார்டன்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி,  அகமதாபாத் டிபண்டர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத் என மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. முதல் கட்ட போட்டிகள் பிப். 2-13 வரை கொச்சியில் நடைபெற்றன. அடுத்து 2ம் கட்டப் போட்டிகள் சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது. முதல்நாள் போட்டியில்  சென்னை ஸ்பார்டன்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 19ம் தேதி முதல் அரை இறுதி, 20ம் தேதி 2வது அரை இறுதி, பிப். 22ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதுவரை நடந்த 12 போட்டிகளில் கோழிக்கோடு ஹீரோஸ் (11) புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Advertising
Advertising

மகளிர் வாலிபால் காட்சிப் போட்டி

புரோ வாலிபால் லீக் சார்பில் மகளிர் வாலிபால் போட்டியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம். நடப்பு சீசனின் இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் மகளிர் வாலிபால் காட்சிப் போட்டி நடைபெறும். இந்தப் போட்டி மஞ்சள், நீலம் அணிகளுக்கு இடையே நடைபெறும். சர்வதேச வீராங்கனைகள் அலெக்சித்ரா நீலம் அணிக்காவும், மரீனா ஸ்வெட்டநோவா மஞ்சள் அணிக்காகவும் களமிறங்குவார்கள். இரண்டு அணிகளிலும் இடம் பெறும் மற்ற வீராங்கனைகள் கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். - புரோ வாலிபால் சிஇஓ ஜாய் பட்டாச்சர்யா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: