துளித் துளியாய்

* இரானி கோப்பையில் விளையாடிய இதர இந்தியா, விதர்பா அணி வீரர்கள், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

* இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் களமிறங்கிய ஹனுமா விஹாரி தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
Advertising
Advertising

* தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில் இலங்கை அணிக்கு 304 ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது. தென் ஆப்ரிக்கா 235 & 259; இலங்கை 191 & 83/3.

* ஐஎஸ்எல் தொடரில் கொச்சியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எசி அணியை வீழ்த்தியது.

* உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கக்கூடிய 18 வீரர்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு போதிய ஓய்வளித்து முழு உடல்தகுதியுடன் தயராவதை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்று தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: