மார்கண்டே அபார பந்துவீச்சு இந்தியா ஏ இன்னிங்ஸ் வெற்றி

மைசூரு: இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் (4 நாள், அங்கீகாரமற்றது), இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 68 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

மைசூரு நரசிம்ம ராஜா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 392 ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 81, ஈஸ்வரன் 117, பாஞ்ச்சல் 50, பாரத் 46 ரன் விளாசினர். இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்சில் 144 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது.

இரண்டாவது இன்னிங்சையும் தொடர்ந்து விளையாடிய அந்த அணி, மூன்றாம் நாளான நேற்று 180 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (53.3 ஓவர்). பென் டக்கெட் 50, கிரிகோரி 44, கேப்டன் பில்லிங்ஸ் 20, ஹெய்ன் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் 21 வயது இளம் ஸ்பின்னர் மயாங்க் மார்கண்டே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவர் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற உள்ள டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 68 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: