×

சொர்க்கத்துக்கு போகிறேன் தாக்குதலுக்கு முன் வீடியோ வெளியிட்ட தீவிரவாதி அகமத்

தீவிரவாத அமைப்புகள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து  கொடூர செயல்களை அரங்கேற்றுகின்றன. அவ்வாறு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஓராண்டிலேயே மனித வெடிகுண்டாக மாறி 40 வீரர்களை கொடூரமாக காவு வாங்கிய தீவிரவாதிதான் அதில் அகமத் தார். 22 வயதே ஆன இவனுக்கு ‘அதில் அகமத் காடி தக்ரானேவாலா’, ‘குடிபாக் வக்காஸ் கமாண்டோ’ என்ற ‘வீர’ பெயர்களும் உண்டு. புல்வாமா மாவட்டத்தில் உள்ள குந்திபாத் கிராமத்தை சேர்ந்தவன். பள்ளிப்படிப்புக்கு 2017, மார்ச்சில் முழுக்கு போட்டு, ஜெய்ஷ் இயக்கத்தில் கடந்தாண்டு சேர்ந்தான்.

இவன் மனித வெடிகுண்டாக மாறி, வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தில் சென்று மோதி நடத்திய தாக்குதல், இந்திய மக்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்தியாவில், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் மூலம் நடத்தப்பட்ட 3வது மனித வெடிகுண்டு தாக்குதல் இது என்று கூறுகின்றனர் போலீஸ் அதிகாரிகள். ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, தீவிரவாதி அதில் அகமத் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளான். அதில், ‘‘என் பெயர் அதில். நான் ஓராண்டுக்கு முன்பு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தேன். எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கத்தில் சேர்ந்தேனோ அதற்கான வாய்ப்பு தற்போதுதான் எனக்கு கிடைத்துள்ளது. இந்த வீடியோ உ்ங்களை வந்தடையும்போது, நான் சொர்க்கத்தை அடைந்திருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு நான் விடுக்கும் கடைசி செய்தி இதுதான்’’ என்று அவன் கூறியுள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : I am going ,parachute
× RELATED சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய...