×

தாக்குதலை கண்டித்து ஜம்முவில் வன்முறை : ராணுவ ரோந்துக்கு தடை

புல்வாமா தாக்குதலால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலை கண்டித்து ஜம்முவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தியபடி, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்பு படைகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் பாதுகாப்பு படை வாகனங்கள் ரோந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் பாதுகாப்பு படை வாகனங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வதற்கு இன்று ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்பட்டது’’ என்றனர். இந்த தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்ததால், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Jammu , Violence,Jammu ,condemning the attack,ban on the military patrol
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...