×

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு

பெங்களூரு : சொத்து  குவிப்பு வழக்கில் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி,  சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு  நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்தது. மறைந்த ஜெயலலிதா கடந்த 1991  முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு தனி  நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நடந்தபின் கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளியாக உறுதி செய்து  நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தீர்ப்பளித்தார்.இதை எதிர்த்து  குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  அதை விசாரித்த  நீதிமன்றம், 2015 மே 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் நான்கு  பேரையும் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக  அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை  விசாரித்த  நீதிமன்றம், 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில்  குற்றவாளிகளை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  ரத்து செய்ததுடன், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தனி நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை உறுதி செய்தது.

இதை தொடர்ந்து குற்றவாளிகளான சசிகலா,  இளவரசி, சுதாகரன் ஆகியோர் பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன்  இரண்டு ஆண்டுகள் முடிந்தது. இதில் சசிகலா இரண்டு முறையும், இளவரசி  ஒருமுறையும் பரோலில் வந்துள்ளனர். சுதாகரன் இதுவரை ஒருமுறைகூட  பரோலில் செல்லவில்லை. மேலும், இரண்டு ஆண்டுகளில் சசிகலா மற்றும் இளவரசி  ஆகியோர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி திட்டத்தில் கன்னட  கோர்ஸில் சேர்ந்து படித்து வருகிறார்கள். சிறையில் முடிந்த வரை வேலையும்  செய்து வருகிறார்கள். அவர்கள் மூன்று பேரும் இன்னும் இரண்டு ஆண்டுகள்  சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangalore ,jail ,Agrahar , sasikala ,second year, Agrahar jail
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை