கோவையில் இருந்து காரில் கடத்திய 56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: கேரள போலீசார் விசாரணை

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், கோவையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அடுத்த குலுக்கல்லூரில் கொப்பம் எஸ்.ஐ. ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, காரின் சீட்டுப்பகுதிகளில் சிறப்பு அறை அமைத்து அதில் புதிய 500, 2000 நோட்டுகள் அடங்கிய மொத்தம் ரூ.56 லட்சம் கடத்தி செல்வது தெரியவந்தது.

 விசாரணையில், மலப்புரம் மாவட்டம், மாரஞ்சேரியைச் சேர்ந்த பிரமோத் (42) என்பதும், கோவையில் இருந்து ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரமோத்தை கைது செய்து, அவரிடம் இருந்த ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொடுத்து அனுப்பிய நபர்கள், யாரிடம் கொடுக்க கூறினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: