×

சபரிமலையில் தரிசனம் செய்ய கணவனுடன் வந்த இளம்பெண்: பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பி சென்றார்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் தரிசனத்துக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பக்தர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. இளம்பெண்கள் மீண்டும் தரிசனம் செய்ய வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. .இந்நிலையில், நேற்று முன்தினம் தெலங்கானாவை சேர்ந்த 4 பெண்கள் தரிசனத்துக்காக வந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால், அவர்கள் திரும்பி சென்றனர். இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் நேற்று தரிசனத்துக்காக வந்தார். நிலக்கல்லில் இருந்து கேரள அரசு பஸ்சில் இருவரும் சென்றனர்.

பம்பையில் இறங்கி சன்னிதானத்துக்கு நடந்து சென்றனர். மரக்கூட்டம் பகுதியில் அவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த பக்தர்கள், இருவரையும் தடுத்து நிறுத்தினர். அந்த பெண்ணிடம் வயது குறித்த ஆவணங்களை கேட்டனர். அவர் அடையாள அட்டையை காட்டினார். அதில் அவருக்கு 40 வயது என தெரியவந்தது. எனவே, அவர் தரிசனத்துக்கு செல்லக் கூடாது என பக்தர்கள்  போராட்டம் நடத்தினர். இதனால், அந்த பெண் திரும்பிச் சென்றார். போலீசார் அவரை பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்து சென்றனர். அவரது கணவர் மட்டும் தரிசனம் செய்ய சன்னிதானத்துக்கு புறப்பட்டு சென்றார். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala ,protest ,devotees , Sabarimala, darshan, husband, young woman
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு