×

நிலமோசடி வழக்கு வதேராவின் 4.62 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ராஜஸ்தான் மாநிலம், பிகானிரில் கடந்த 2015ம் ஆண்டு ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் குறைந்து விலைக்கு நிலங்கள் வாங்கி, அவற்றை அதிக விலைக்கு விற்றதாக ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் வதேரா மீது குற்றவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.4.62 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vadra , Land case case, Vadra, property freezing
× RELATED ஒவ்வொரு வாக்கும் முக்கிய பங்கு வகிக்கும்; பிரியங்கா காந்தி