வாட்ஸ்அப்பில் வீடியோ வைரல் வகுப்பறையில் மது அருந்தியதலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே வகுப்பறையை பாராக மாற்றி மதுபோதையில் தலைமை ஆசிரியர் நிதானம் தவறி கிடக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள், மனோகரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே நீர்த்தொம்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பல கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மனோகர், தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

Advertising
Advertising

இவர் வகுப்பறையில் ஆசிரியரின் டேபிளில் மது அருந்திவிட்டு வகுப்பறையின் வாசலில் சேரில் அமர்ந்திருப்பது போலவும், காலி மதுபாட்டில், வாட்டர் கேன், சிப்ஸ் பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது போலவும் வாட்ஸ்அப்பில் வைரலாக வீடியோ பரவி வருகிறது.இதைப்பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே பள்ளி நேரத்தில் பள்ளியிலேயே குடித்திருப்பது வேதனையாக உள்ளது. இவர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இந்த வீடியோவை பார்த்த சிஇஓ மனோகரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: