கோகுல்ராஜ் கொலை வழக்கில் தடயவியல் நிபுணர்கள், மாஜிஸ்திரேட் சாட்சியம்

நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட், தடய அறிவியல் நிபுணர்கள் நாமக்கல் கோர்ட்டில் நேற்று சாட்சியம் அளித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ்(23) கொலை வழக்கில், சாட்சிகள் விசாரணை கடந்த 6 மாதமாக, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று மீண்டும் சாட்சிகள் விசாரணை, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை, போலீசார் ஆஜர்படுத்தினர்.

சென்னை தடய அறிவியல் பிரிவு அலுவலர்கள் அழகேசன், திலகா ஆகிய இருவரும் சாட்சியம் அளித்தனர். கொலை செய்யப்படும் முன்பு, கோகுல்ராஜ் ஒரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி, சென்னை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு கையெழுத்து ஒப்பீடு சோதனைக்காக அனுப்பி முடிவுகளை தெரிந்து கொண்டனர். இதனடிப்படையில், இருவரும் அளித்தனர். அரசு தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி இருவரிடமும் விசாரணை நடத்தினார். மேலும், அப்போதைய நாமக்கல் 2வது மாஜிஸ்திரேட் ராஜேஷ்கண்ணனும் ஆஜராகி சாட்சியமளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: