×

அதிமுக அரசின் 2ம் ஆண்டு நிறைவு: சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி

சென்னை: அதிமுக அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஜெயலலிதா அரசின் - சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு என்ற இரண்டாண்டு சாதனை மலர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு மற்றும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், பொன்மொழிகள், இரண்டாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளின் குறும்பட குறுந்தகட்டினை முதல்வர் எடப்பாடி வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக் கொண்டார். காலப்பேழை புத்தகத்தை முதல்வர் வெளியிட தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் நன்றி கூறினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்கள் எழிலழகன் (செய்தி), ரவீந்திரன் (மக்கள் தொடர்பு), இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Edappadi ,Chief Minister , AIADMK, 2nd year term, Chief Minister Edappadi
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...