பம்ப்செட்டில் அடைத்து வைத்து 5 நாள் பலாத்காரம்: பள்ளி மாணவியை கொன்று புதைத்த மேலும் 4 பேர் கைது

சென்னை: பள்ளிப்பட்டில்  மாணவியை கடத்தி சென்று, பம்ப் செட்டில் 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்ெகாடுமை செய்து கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.  திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கொத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சரிதா (15).  இவர், கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த 10ம் தேதி கீச்சலம் கிராமத்துக்கு அருகே ஓடையில் துண்டு துண்டாக எலும்புக்கூடு கிடந்தது. அருகே பள்ளி சீருடை, செருப்பு இருப்பதை அறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertising
Advertising

டிஐஜி தேன்மொழி, எஸ்பி பொன்னி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் ஆர்.கே.பேட்டை ரமேஷ், பொதட்டூர்பேட்டை ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரின் விசாரணையில், ஓடையில் கிடந்த துண்டு துண்டான எலும்புகள், சீருடை, செருப்புகள் மூலம் காணாமல் போன பள்ளி மாணவி சரிதா என தெரியவந்தது.பின்னர் 4 தனிப்படைகள் மூலம் மாணவி கொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தீவிர வேட்டை நடந்தது. இதையடுத்து, பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அவரது முறைமாமன் சங்கரய்யா (21) என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தனது காதலை ஏற்காததால் சரிதாவை கடத்தி சென்று பம்ப்செட்டில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் கூட்டு சேர்ந்து மாணவியை 5 நாட்கள் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து இரும்பு ராடால் அடித்து கொலை செய்து, பம்ப்செட் அருகே புதைத்ததாகவும்,

பின்னர் 2 மாதங்கள் கழித்து, அங்கு அறுவடை பணிகள் நடந்ததால் மாணவியின் பிணத்தை தோண்டி எடுத்து, அருகில் உள்ள ஓடை பகுதியில்  மீண்டும் புதைத்ததாகவும் சங்கரய்யா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த நாதமுனி (42), கிருஷ்ணமூர்த்தி (44), ஜெகதீச ரெட்டி (43), மோகன்ராஜ் (42) ஆகிய 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: