பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் : அமெரிக்கா நிர்வாகம் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன் : பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் அங்கு பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது. எனவே அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முடிவை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் Balochistan மற்றும் Khyber Pakhtunkhwa ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு செல்வத்தையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், ஷாப்பிங் மால்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும் அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பபான புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா எச்சரி்க்கை விடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: