கஜா புயலால் பாதித்தபோது வராதவர் தேர்தல் வருவதால் மோடி திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: கஜா புயலால் பாதித்த போது வராத மோடி, எம்பி தேர்தல் வருவதால் தமிழகத்திற்கு திரும்பத் திரும்ப வருகிறார் என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். திமுக எம்.பி. கனிமொழி, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நாட்ைட துண்டாடவும், மக்களிடையே பிளவு, பிரிவினை ஏற்படுத்தவும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜ கொண்டு வந்தது. அதை, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அந்த சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுகுழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் பாஜவால் நிறைவேற்ற முடியவில்லை. இனிமேல் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது.

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சி, முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய வேண்டும். கஜா புயலால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் மோடி, அந்த துயர சம்பவத்தை சிறிது கூட நினைத்துப் பார்க்காத மோடி, தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தமிழகத்துக்கு திரும்பத் திரும்ப வருகிறார்.  அதனால்தான் தமிழக மக்களும் ஒட்டு மொத்தமாக, “மோடியே திரும்பி போ” என்று வலியுறுத்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிடுகின்றனர்.நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சரி அல்லது தனித்து போட்டியிட்டாலும் சரி, ஒருபோதும் வெற்றிபெற போவதில்லை. அதிமுகவை, தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: