தாலி கட்டிய கணவரான மீன் வியாபாரிக்கு துரோகம் கள்ளசாவி போட்டு சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்த மனைவி கைது: கள்ளக்காதலனிடம் இருந்து 25 சவரன் நகை, 5 லட்சம் பறிமுதல்

சென்னை: மீன் வியாபாரி வீட்டில் போலி சாவி மூலம் 25 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ளையடித்த சென்ற சம்பவம் கோட்டூர்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர்(40). மீன் வியாபாரியான இவர், தனது மனைவி தேவி (38) உடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லையாம். இந்நிைலயில் பாஸ்கர் அதிகாலையிலேயே மீன் வியாபாரத்திற்கு சென்று விட்டு இரவு தான் வீட்டிற்கு வருவது வழக்கம். இதற்கிடையே, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கருடன் மீன் வியாபாரம் செய்யும் அவரது நண்பர்  அர்ஜூனன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் தேவிக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பிறகு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் பாஸ்கர் வீட்டில் இல்லாத போது அர்ஜூனனுடன் தேவி  நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் பாஸ்கருக்கு தெரியவந்தது. இதுகுறித்து பல முறை கண்டித்தும் தேவி அர்ஜூனனுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. பிறகு பாஸ்கர் தனது மனைவியை வீட்டில்  இருந்து வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேவி தற்போது தனது கள்ளக்காதலன் அர்ஜூனனிடன் வசித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், பாஸ்கர் நேற்று முன்தினம் காலை வழக்கமாக வீட்டை பூட்டிவிட்டு மீன் வியாபாரத்திற்கு சென்று விட்டார். இதை பார்த்த தேவி, தனது கள்ளக்காதலனுடன் கணவர் வீட்டிற்கு வந்து, ஏற்கனவே தயாராக  வைத்திருந்த போலி சாவி மூலம் வீட்டை திறந்து, பீரோவில் ைவத்திருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல்  வந்துவிட்டனர்.வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு வந்த பாஸ்கர், வீட்டை திறந்து உள்ளே பார்த்த போது பீரோ அருகே துணிகள் சிதறி கிடந்தது. உடனே பீரோவை திறந்து பார்த்த போது அதில் ைவத்திருந்த 25  சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதையடுத்து பாஸ்கர் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பாஸ்கர் வீட்டிற்கு தேவி தனது கள்ளக்காதலனுடன் வந்து  சென்றதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்படி போலீசார் பாஸ்கர் மனைவி தேவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது கள்ளக்காதலன் அர்ஜூனனுடன் சேர்ந்து நகை மற்றும்  பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். நகையை தேவியும், பணத்தை அர்ஜூனனும் பிரித்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் தேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அர்ஜூனனையும் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் ெசய்தனர்.

இச்சம்பவம் கோட்டூர்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: