ஐஎஸ்எல் கால்பந்து ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் ேபாட்டியில் ஆறுதல் வெற்றிக்காக சென்னையின் எப்சி அணி கேரளாவுடன் மோத உள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து  தொடரில் நடப்பு சாம்பியனான  சென்னை அணி, தொடர் தோல்வி காரணமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.    சென்னை அணி இதுவரை  விளையாடிய 15  போட்டிகளில்   2  போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் டிரா கண்டுள்ளது. 11 ேபாட்டிகளில் தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று நடக்கும் லீக்  ஆட்டத்தில் சென்னையில் எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

Advertising
Advertising

  கேரளா அணியின் நிலைமையும் பரிதாபம்தான். ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதுவும் முதல் ேபாட்டியில் கொல்கத்தாவை வென்றதுடன் சரி. அதன் பிறகு விளையாடிய 14 போட்டிகளில் ஒன்றில் கூட  கேரளா வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கேரளாவும் இழந்து விட்டது. இந்த 2 அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி இரவு  7.30 மணிக்கு தொடங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: