வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நேற்று முன்தினம் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டை ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டு பேசியதால் 4 போட்டிகளில் தடைவிதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின்  வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘போட்டியின் பரபரப்பான கட்டத்தில்தான், வார்த்தை போரில் ஈடுபட நேர்ந்தது. நான் பந்து வீசும்போது ரூட்  டென்ஷனாக இருந்தார். இதுபோன்ற நேரங்களில் வழக்கமாக மனரீதியான தாக்குதலை வேகப்பந்துவீச்சாளர்கள் தருவது வழக்கம். ஆனால், எனக்கான எல்லையை மீறி வார்த்தைகளை கொட்டியது தவறுதான். இதற்காக போட்டி  முடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். மரியாதையாக பேச வேண்டுமெனவும் கற்றுக் கொண்டேன்’’ என்றார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: