ஆஸி.க்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் இந்திய அணி இன்று அறிவிப்பு: திரும்புகிறார் விராத் கோஹ்லி

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில், மீண்டும் கேப்டன் கோஹ்லி தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டணத்தில் வரும் 24ம் தேதியும், 2வது டி20 போட்டி  பெங்களூருவில் வரும் 27ம் தேதியும் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும்.இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட உள்ளது. எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 3வது  போட்டியுடன் ஓய்வளிக்கப்பட்ட விராத் கோஹ்லி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 தொடரில் மட்டும் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertising
Advertising

இத்தொடரில் 2வது விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்கப் போவது ரிஷப் பண்ட்டா, தினேஷ் கார்த்திக்கா என்பதும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான உனாத் கட், கலீல் அகமது இருவரில் யார் அணியில் இடம் பெறுவது என்பதும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கே.எல். ராகுலுக்கு 3வது துவக்க வீரராக மீண்டும் வாய்ப்படலாம்.  ஓய்வுக்குப் பின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா மீண்டும்  அணிக்கு திரும்ப உள்ளது புதிய தெம்பை அளிக்கும்.

உலக கோப்பை தொடருக்கு முன்பாக கடைசி கட்டமாக நடக்கும் தொடர் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தொடரின் மூலமாக உலக கோப்பை அணி இறுதி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: