×

சூப்பர் ஜம்போ விமானம் உற்பத்தியை நிறுத்த முடிவு

பாரீஸ்: உலகின் மிகப்பெரிய விமானம் என்று பெருமை பெற்ற சூப்பர் ஜம்போ ஏ380 டபுள் டெக்டர் விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து  வழங்குகிறது. இந்த நிறுவனத்திடம் அதிக விமானங்களை ஆர்டர் செய்யும் துபாயின் எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஆர்டர்களை குறைத்துள்ளது. மொத்தம் 39  விமானங்கள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல் சூப்பர் ஜம்போ விமானம் தயாரிக்கப்பட்டது.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் முதன் முதலாக 2007 அக்டோபர் 25ம் தேதி அறிமுகம்  செய்யப்பட்டது. 850 பயணிகள் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும். ஆனால் 500 டிக்கெட்கள் கூட விற்பனை ஆவதில்லை. இதனால் விமான  நிறுவனங்கள் ஆர்டர்களை குறைத்து வருகின்றன.
 
 321 விமான ஆர்டர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 10 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டன. இந்த ஆண்டு 8 விமானங்களும் அடுத்த  ஆண்டு 7 விமானங்களும் 2021ல் 2 விமானங்கள் டெலிவரி செய்ததும் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Super Jumbo ,production , Super Jumbo Flight, Emirates Institute
× RELATED காளி வெங்கட்டின் விவசாயிகளுக்கான பாடல்