ரியல் எஸ்டேட் துறையில் 95% நிறுவனங்களுக்கு பான் எண் இல்லை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில், 95 சதவீத நிறுவனங்களிடம் பான் எண் இல்லை என்று சிஏஜி தெரிவித்துள்ளது.  மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நாடு முழுவதும் 12 மாநிலங்களில் உள்ள மொத்தம் 54,578 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்துள்ளன. இவற்றில், 95 சதவீத  நிறுவனங்கள், அதாவது, 51,670 நிறுவனங்கள் கம்பனிகள் பதிவேட்டில் பான் எண் குறிப்பிடவில்லை. இதனால் இந்த நிறுவன பரிவர்த்தனைகளை தணிக்கை  செய்வது, கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படும்.அதிலும்  மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார், குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் பதிவு செய்துள்ள ஒரு ரியல் எஸ்டேட்  நிறுவனம் கூட பான் எண் சமர்ப்பிக்கவில்லை. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 20,893 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன.

Advertising
Advertising

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பதிவு செய்துள்ள 7,520 நிறுவனங்களில் 98.3 சதவீத நிறுவனங்களுக்கு (7391) பான் எண் இல்லை. தமிழகத்தில் 4,258  நிறுவனங்கள் உள்ளன இவற்றில் 3,404 நிறுவனங்களுக்கு பான் எண் இல்லை. இதனால் இந்த நிறுவனங்கள் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல்  செய்கிறதா என்பதை உறுதி செய்வது இயலாத ஒன்று என்று தெரிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: