தங்கம் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள்

முன்பெல்லாம் வங்கிகளில் பணம் வரவு செலவிற்காக நேரில் சென்று காத்திருக்கும் நிலை இருந்தது. நேர விரயத்தை தடுப்பது, வங்கிப் பணி சுமைகளை குறைப்பது உள்ளிட்டவற்றிற்காக ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின் எனும் ஏடிஎம் மையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இதனால் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடிகிறது. இதற்கான கார்டு ஒவ்வொரு கணக்குதாரர்க்கும் வழங்கப்படுகிறது. இது பாலிவினைல் குளோரைடு எனும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அட்டையின் முகப்பிலும் 16 இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். முதல் எண் 4ல் துவங்கினால் விஷா கார்டு, 5ல் துவங்கினால் மாஸ்டர் கார்டு என்று ஒவ்வொரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். 7 முதல் 15வது எண் வரை உள்ள எண்கள் வங்கி, கணக்கு எண் உள்ளிட்டவற்றுடனும், 16வது இலக்க எண் காலாவதி மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.

ஆன்லைன் வர்த்தகத்தின் போது கார்டின் சிவிவி.எண் கேட்கப்படும். இது அட்டையின் பின்பக்கம் காந்த பட்டைக்குக் கீழே கையெப்பமிடப்பட்ட பகுதி அருகில் உள்ள மூன்று இலக்க எண் ஆகும்.இதனை கார்டு வெரிபிகேசன் வேல்யூ என்று அழைக்கிறார்கள்.ஏடிஎம் பரிவர்த்தனைக்காக ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு வங்கிகளுடன் உடன்பாடு செய்திருக்கும். இதனால் மற்ற வங்கி கார்டுகளையும் ஒரே இயந்திரத்தில் பயன்படுத்த முடியும். இதற்கான வாடிக்கையாளர்க்கு வழங்கப்பட்ட தொகையை வங்கிகள் பரிமாறிக் கொள்ளும். ஏடிஎம் இயந்திரத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். எனவே அதனை வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போக முடியாது. பின்னாலேயே போலீஸ் வந்து விடும். பணத்தை பெற மட்டுமல்ல. பணம் செலுத்துதல், மினி ஸ்டேட் பெறுதல் என்று தற்போது பயன்பாடு சற்று விரிவடைந்துள்ளது.இருப்பினும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் தங்கம் வழங்கும் ஏடிஎம் மையங்கள் வந்துவிட்டன. இதில் 320 வகையான தங்கப்பொருட்களை பெற முடியும். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இவ்வகை ஏடிஎம் மையங்கள் உண்டு.1967ல் லண்டனில் முதல் ஏடிஎம் மையம் நிறுவப்பட்டது. அப்போது 6 இலக்க ரகசிய எண்களே வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் இதனை நினைவுபடுத்தி வைக்க சிரமப்பட்டதால் 4 இலக்கமாக மாற்றப்பட்டது.

இருப்பினும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 6 இலக்க ரகசிய எண்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏடிஎம் என்றும், கனடா போன்ற நாடுகளில் கேஷ் மிஷின் என்றும், நியூசிலாந்து, இங்கிலாந்தில் கேஸ்பாய்ண்ட் என்றும் இது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 1987ல் கொல்கத்தாவில் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்தது. முதல் நடமாடும் இயந்திரம் 2004ல் கேரளா படகில் அமைக்கப்பட்டது.இருப்பினும் தற்போது பல வங்கிகள் தங்கள் வாகனங்களிலேயே ஏடிஎம் களை நிறுவி பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி சேவையாற்றி வருகின்றன. பழநி தைப்பூசம் போன்ற நேரங்களில் இதுபோன்றவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம்.எலக்ட்ரானிக் சாவி போன்ற செயல்படும் இந்த அட்டையின் பாதுகாப்பு அம்சமே ரகசிய எண்தான். அதனால்தான் அதனை ரகசிய எண் என்று அழைக்கிறார்கள். இணையவழி திருட்டுக்களும், தவறுகளும் தற்போது வெகுவாய் அதிகரித்துள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் இதை யாரிடமும் சொல்லக் கூடாது. மீறினால் சில நொடிகளில் உங்கள் பணம் அத்தனையும் பிறரால் துடைத்து எடுக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: