வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய ரயில்களைத் தெரியுமா..?

புதுடெல்லி: நாளொன்றுக்கு 2.25 கோடிபயணிகளையும், 25 லட்சம் டன் சரக்குகளையும் இந்தியன் ரயில்வே சுமந்துசெல்கிறது. இந்தியாவில் சுமார் 64ஆயிரத்து 105கிமீ.ரயில்பாதையும், 6ஆயிரத்து 909 ரயில் நிலையங்களும் உள்ளன. உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்ஒர்க் இது. (அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை முதல் 3இடங்களை வகிக்கின்றன). இந்தியாவில் மிக அதிக பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனம்(சுமார்16லட்சம்பேர்). இந்தியாவில் ரயில் தொடர்பில்லாத இரண்டு மாநிலங்கள் சிக்கிம், மேகாலயா. நாட்டின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலாக திப்ரூகர்(அசாம்)-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் விளங்குகிறது. மொத்தம் 4ஆயிரத்து 286கிமீ.யை 82மணிநேரத்தில் கடக்கிறது.

2011ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்புவரை ஜம்முதாவி-கன்னியாகுமரி ஹிமசாகர் எக்ஸ்பிரஸே மிகநீண்ட தொலைவு பயணிக்கும் ரயிலாக இருந்தது. இந்தியாவின் முதல்ரயில்நிலையம் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்னிமல்ஆகும்.(பழையபெயர் விக்டோரியா டெர்மினல்). சர்வதேச ரயில்களாக தார்எக்ஸ்பிரஸ், சம்கேதா,மைத்ரி எக்ஸ்பிரஸ் விளங்குகிறது. இதில் தார் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் ஜோத்பூர்-பாகிஸ்தானின் கராச்சி இடையே பயணிக்கிறது. சம்கேதா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் அட்டாரி-பாகிஸ்தானின் வாகா எல்லையை இணைக்கிறது. மைத்ரி எக்ஸ்பிரஸ் கொல்கத்தா-வங்காளதேசத்தை இணைக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: