பாரத் 22 பங்குகள் இன்று வெளியீடு

புதுடெல்லி: பாரத் 22 என்ற புதிய இடிஎப் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில், பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டில்  ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் மூலம் மத்திய அரசு 2 முறை இடிஎப் பங்கு விற்பனையில் ரூ.22,900 கோடி திரட்டியது. இதில் கடந்த 2017 நவம்பரில் திரட்டப்பட்ட ரூ.14,500 கோடி மற்றும் கடந்த ஜூன் மாதம் திரட்டிய ரூ.8,400 கோடி அடங்கும். நடப்பு நிதியாண்டில் மட்டும் கடந்த  ஜனவரி மாதம் வரை ரூ.35,533 கோடி திரட்டியுள்ளது. தற்போது சுமார் ரூ.4,000 கோடி திரட்டுவதற்காக பாரத் 22 பங்குகள் இன்று ஒரு நாள் மட்டும் விற்பனை செய்யப்ப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: