தொழில் துறை உற்பத்தி டிசம்பரில் மந்தம்

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2.4 சதவீதமாக உள்ளது. சுரங்க துறைகளில் உற்பத்தி மந்தமாக இருந்ததே இதற்கு  காரணம்.  இந்த துறையில் உற்பத்தி ஒரு சதவீதம் குறைந்துள்ளது. தொழில் துறை உற்பத்தி வவளர்ச்சி இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில் 7.3 சதவீதமாக  இருந்தது.  கடந்த ஆண்டு நவம்பரில் தொழில்துறை வளர்ச்சி 0.5 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது பின்னர் 0.3 சதவீதமாக குறைக்கப்பட்டது.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான தொழில்துறை உற்பத்தி முந்தைய ஆண்டை விட சற்றே உயர்ந்து 4.6 சதவீதமாக உள்ளது.   மின்துறை உற்பத்தியிலும் பெரிய வளர்ச்சி இல்லை என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: