டெபிட் கார்டு மோசடி: 921 புகார்கள் பதிவு

புதுடெல்லி: டெபிட், கிரெடிட் கார்டு, இணைய வங்கிககள் மூலம் நடந்த மோசடி தொடர்பாக, நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை 932 புகார்கள்  ரிசர்வ் வங்கியில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மட்டும் ₹1 லட்சம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்டகேள்விக்கு பதிலளித்து, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் அஹ்லுவாலியா  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

 நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ரிசர்வ் வங்கியில் 921 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இவற்றின் மூலம் ஒரு  லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. ஆனால் இந்த மோசடி எண்ணிக்கை 2015-16ல் 1,191, 2016-17 நிதியாண்டில் 1,372 2017-18ல் 2,59 என இருந்தது.  தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரப்படி 2014ல் 9,622 மோசடி வழக்குகள், 2015ல் 11,592 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: