புனே: மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டிகளாக தேர்வு செய்யபட்டுள்ள 100 நகரங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை விரைவாக கொண்டு செல்லும் நகரம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சகம் என்று தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2018ம் ஆண்டுக்கான சிறந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நகரமாக புனே தேர்வு செய்யப்பட்டுள்ளது.