கடைசி டெஸ்டில் இங்கிலாந்துக்கு ஆறுதல்: தொடரை வென்றது வெ.இண்டீஸ்

செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 232 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. கிராஸ் ஐலெட், டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 277 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 154 ரன்னும் எடுத்து  ஆல் அவுட்டாகின.  123 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. டென்லி 69, பட்லர் 56, ரூட் 122, ஸ்டோக்ஸ் 48 ரன் விளாசினர்.இதைத் தொடர்ந்து, 485 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 69.5 ஓவரில் 252 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொத்தது.

ஹோப் 14, ஹெட்மயர், டோரிச்  தலா 19, ரோச் 29, ஜோசப் 34, கீமோ பால் 12 ரன் எடுத்தனர். கடைசி வரை போராடிய ரோஸ்டன் சேஸ் 102 ரன் ( 191 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆண்டர்சன், மொயீன் அலி தலா 3, பென் ஸ்டோக்ஸ் 2, மார்க் வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மார்க் வுட் ஆட்ட நாயகன் விருது  பெற்றார். இங்கிலாந்து அணி 232 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்த அணியின் கெமார் ரோச் தொடர் நாயகன் விருது  பெற்றார் (3 போட்டியில் 18 விக்கெட்). அடுத்து இரு அணிகளும் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: