கத்தார் ஓபன் டென்னிஸ் விலகினார் பிளிஸ்கோவா: 2வது சுற்றில் ஜூலியா

தோஹா: கத்தார் டோட்டல் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா விலகினார்.தோஹாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 2வது ரேங்க் வீராங்கனையாக இடம் பெற்றிருந்த கரோலினா பிளிஸ்கோவா (செக்.), வைரஸ் காய்ச்சல் காரணமாக விலகுவதாக நேற்று அறிவித்தார். ஏற்கனவே டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி வைரஸ் காய்ச்சலால் போட்டியில் இருந்து விலகிய நிலையில், தற்போது கரோலினா பிளிஸ்கோவாவும் அதே காரணத்துக்காக விலகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய  செய்துள்ளது.

Advertising
Advertising

கரோலினாவுக்கு பதிலாக அவரது சகோதரி கிறிஸ்டினா பிளிஸ்கோவா ஒற்றையர் பிரிவில் களமிறங்குவார் என கத்தார் ஓபன் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஜெர்மனியின் ஜூலியா கோயர்ஜஸ் தனது முதல் சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை எளிதாக வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4,  6-4 என்ற நேர் செட்களில் ஜெலினா ஓஸ்டபென்கோவை (லாட்வியா) வென்றார். சீன தைபே வீராங்கனை சூ வெய் சை 2-6, 4-6 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் கரோலினா முசோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: