100 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ள அபூர்வ கருஞ்சிறுத்தை

பிரிட்டோரியா: ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லைக்கெப்பியா என்ற இடத்தில் அரிய மற்றும் அபூர்வ வகையான கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர் குறிப்பிட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தினார்.

கென்யாவின் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை பவுர்ணமி வெளிச்சத்தில் கேமராவின் குறுக்கே சென்ற கருஞ்சிறுத்தை கேமராவுக்குள் படம் பிடிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: