நாளை காதலர் தின கொண்டாட்டம் : ரோஜாக்களை ஏற்றுமதி செயுயம் இறுதிகட்ட பணியில் கொலம்பியா

பொகோட்டா: கொலம்பியா நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை பிப்ரவரி 14ம் தேதி. இந்நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம், அன்றைய தினம் காதலர்கள், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு அத்தாட்சியாக விளங்குவது பெரும்பாலும் ரோஜா மலர்களே. நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலர்களின் சின்னமான ரோஜாவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் ஃபகாடடிவா என்ற இடத்தில் ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு அழகான பெட்டிகளில் அதனை அடைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொலம்பியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்களை, பல்வேறு வெளிநாடுகளில் தரம் வாரியாக பிரித்து நேர்த்தியாக அழகுப்படுத்தி பெட்டிகளில் அடைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொலம்பியாவில் பெட்டி ஒன்றில், 300 முதல் 600 ரோஜாக்கள் வரை வைக்கப்பட்டு, அவை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு அமெரிக்கா 38,600 டன் ரோஜா மலர்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் 74 சதவீதம் கொலம்பியா நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. உலகளவில் மலர்கள் ஏற்றுமதியில் நெதர்லாந்து நாட்டிற்கு பிறகு கொலம்பியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: