வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டணம் குறைப்பு

புதுடெல்லி: டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படவிருக்கும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணத்தில் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ஐசிஎப்பில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் டெல்லி - வாரணாசி இடையே வரும் 15ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்கிறார்.  இந்த ரயிலுக்கான கட்டண விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கட்டணம் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து கட்டணத்தில் சிறிது குறைக்கப்பட்டு புதிய கட்டணம் நேற்று  வெளியிடப்பட்டது. அதன்படி, டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இடையே அமரும் வசதி கொண்ட ஏசி பெட்டியில் பயணிக்க கட்டணம் ₹90 குறைக்கப்பட்டு ₹1,760 ஆகவும், எக்சிகியூடிவ் கட்டணத்தில் ₹210 குறைக்கப்பட்டு  ₹3,310 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக வாரணாசியில் இருந்து டெல்லிக்கு அமரும் வசதி கொண்ட ஏசி பெட்டியில் கட்டணம் ₹1,700 ஆகவும், எக்சிகியூடிவ் வகுப்புக்கு ₹3,260 ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: