தகவல் பலகை

குளிர்காலத்தில் நம் மூச்சு புகை போல வெளியேறுவது ஏன்?

Advertising
Advertising

பொதுவாக நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கார்பன்டை ஆக்சைடும், நீராவியும் நிரம்பியுள்ளன. நாம் வெளிவிடும் மூச்சுக்காற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. வெளிப்புற வெப்பநிலையோ மூச்சுக்காற்றைவிட சற்று குறைவாகவே அமைந்திருக்கும். அந்த வெப்பநிலையில் நமது மூச்சுக்காற்று வெளிக்காற்றோடு கலந்து விடும். எனவே அது நமது கண்ணுக்கு புலப்படாது. ஆனால் குளிர்காலம், குளிர்பிரதேசங்களில் வெளிக்காற்றின் வெப்பநிலை மிகவும் குறைவாகவே இருக்கும். அந்தவேளையில் நமது மூச்சுக்காற்று வெளியேறியவுடன் தனது வெப்பநிலையில் 10 டிகிரி சென்டிகிரேட் குறையும். எனவே அதில் உள்ள நீராவியும், கார்பன்டை ஆக்சைடும் மிகச்சிறிய நீர்த்திவலைகளாக மாறிவிடும். அவை வெளிக்காற்றில் உடனடியாக கலக்காமல் மிதந்து செல்லும். அந்த நீர்த்திவலைகளே நமது கண்களுக்கு புகைபோல தோன்றுகின்றன.

மூக்கில் இருந்து ரத்தம் வருவது ஏன்?

மூக்கில் இருந்து ரத்தம் வந்தால் தலையை முன்பக்கமாக சற்றே குனிந்து தலையை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பக்கம் சாயக்கூடாது. அவ்வாறு செய்தால் மூக்கில் உள்ள ரத்தம் தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றுவிடும். இதனால் வாந்தி உணர்வு ஏற்பட்டுவிடும்.முன்பக்கம் சாயும்போது மூக்கினுள் உள்ள ரத்தம் வெளியேறிவிடும். பின்பு கட்டைவிரல் ஆட்காட்டி விரலால் மூக்கைமூடி கொண்டு மூக்கின் மையப்பகுதியில் எலும்பு முடியும் பகுதிக்கு சற்று கீழேவிரல்களை வைத்து அழுத்த வேண்டும்.

5முதல் 10நிமிடம் இவ்வாறு செய்தால் ரத்தம் நின்று விடும். ரத்தம் நிற்காவிட்டால் மூக்கின் மேல் ஒரு மெல்லிய துணியில் ஐஸ்கட்டியை வைத்தால் ரத்தம் வடிவது நின்று விடும். ரத்தம் நின்றதும் மூக்கைப்பிடித்து திருப்பவோ, சீந்தவோ கூடாது. இதுபோன்ற செய்கையினால் ரத்தம் மீண்டும் வர வாய்ப்புள்ளது.மூக்கின் வறட்சி, உயர்ரத்தஅழுத்தத்தினால் மூக்கின்வழியே ரத்தம் வருகிறது. தமனி கெட்டிப்பட்டுவிடுவதனால் ரத்தத்தின்அடர்த்தி குறைவதாலும் இதுபோன்று ரத்தம் வெளியேறும்.

வாழையின் குளுக்கோஸ் சத்து குழந்தைகளுக்கு ஏற்றது

வாழை எல்லா பருவத்திலும் கிடைக்கும். உடல் வளர்ச்சிக்கு அவசியமான எல்லா சத்துக்களும் இதில் அடங்கி உள்ளன. ஒரு பெரிய வாழைப்பழம், 20 திராட்சை, 4 பேரீச்சம்பழம், 2 அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சுசாறு ஆகியவற்றிற்கு சமமாகும். குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகள் நல்ல பலன் பெற முடியும். வாழையில் மலைவாழை, நேந்திரம், ரஸ்தாளி, பூவன், பேயன் என்று பல்வேறு வகைகள் உண்டு.பயன்கள்: இளமையின் இயற்கை ரகசியமாக போற்றப்படுகிறது பழம் இது. திசுக்களை புதுப்பிக்க உதவும். உடம்பின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். பெருங்குடல் இயக்கத்தை இயல்பாக்க வாழைப்பழம் உதவும்.

இதனால் மலம் கழித்தல் எளிதாகும். மூட்டுவலி, முழங்கால் வீக்கம் இருந்தால் வாழைப்பழத்தை தொடர்ந்து 3 முதல் 4 நாட்கள் உணவாக கொள்ளலாம். சமைத்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து உண்ண மாதவிடாய்க்கால வலி, மிதமிஞ்சிய ரத்தப்போக்கு கட்டுப்படும். நன்கு பழுத்த வாழைப்பழத்தை அடித்து கலக்கி மென்னையான பசை போல் செய்து கொள்ள வேண்டும். இதை காயங்களில் பரவலாகப்பூசி துணிக்கட்டு போடலாம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். சிப்ஸ் தயாரித்தும் உண்ணலாம். வாழைப்பழம் குழந்தைகளுக்கும், நோய்களுக்கும் நிறைவான உணவாக இருக்கும். குளிர்சாதனப்பெட்டியில் வைக்க கூடாது. ஏனென்றால் அதன் குறைவான வெப்பநிலை பழங்களை முழுமையாக பழுக்க விடாமல் செய்துவிடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: