தெரிஞ்சுக்கலாம் வாங்க...

பொதுவாக மண் உலர்ந்திருக்கும் நிலையில் ஸ்ட்ரெப்டோமைசெட்டிஸ் எனும் பாக்டீரியாக்கள் இணைந்து கிடக்கின்றன. மழைநீரானது மண்ணில் விழுந்தவுடன் இந்த பாக்டீரியாக்கள் பிளவுற்று ஜியோஸ்மன், மீதைல் ஐசோபோர்நியால் என்னும் வேதிப்பொருட்களை வெளிப்படுத்துகிறது. இந்த வேதிப்பொருட்களே மண் வாசனைக்கு காரணம்.

மிளகில் பப்பாளி விதைகள் கலப்படமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுருங்கி, பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்த உடனே இவற்றை எளிதாக கண்டுபிடித்து விடலாம். மேலும் கருமிளகை கடித்தால் ஏற்படும் காரகுணம் பப்பாளிவிதையை கடித்தால் ஏற்படாது. இதை வைத்தும் உணர்ந்து கொள்ளலாம்.மஞ்சள்தூளில் நிறமேற்றப்பட்ட மரத்தூள் கலப்படமாக பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி டம்ளரில் இந்த மஞ்சளை போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கினால் மஞ்சள் கரையும். மரத்தூள் தண்ணீரில் மிதக்கும். இதை வைத்து கலப்படம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

காப்புரிமை என்பது தான்புதியதாக கண்டுபிடித்த, உருவாக்கிய ஒன்றை பதிவு செய்து கொள்வது ஆகும் இதன் மூலம் மற்றவர்கள் இவர்களின் கண்டுபிடிப்பை பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். காப்புரிமை என்பது கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விபரங்களை பொதுமக்களுடன் பகிர்வதற்காக அரசு வழங்கும் வரையறுக்கப்பட்ட சொத்துரிமை ஆகும். பிற சொத்துரிமை போன்றே இதை விற்கலாம். உரிமம் வழங்கலாம். அடமானம் வைக்கலாம். பிறருக்கென நியமிக்கலாம், மாற்றலாம், அளிக்கலாம் அல்லது எளிதில் கைவிடலாம்.

பாம்புகள் அதன் வயிற்றின் மூலம் அதிர்வுகளை உணரும். எனவே புதர் பகுதியில் நடக்கும் போது செருப்புகளை உராசி கொண்டு சப்தம் எழுப்பியபடி நடப்பது நல்லது. புதர், கழிவு குவியல்கள் பாம்பிற்கு பிடித்தமான இடம். எனவே புதர், சருகு குப்பைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி குழி, பொந்து இருந்தால் உடன் அவற்றை மூடி விட வேண்டும்.

தபால் பட்டுவாடாவை விரைவாகச் செய்து முடிக்க அஞ்சல்குறியீடு உதவுகிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள போஸ்டல் குறியீடு போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் என்று அழைக்கப்படுகிறது. பின்கோடில் 6 இலக்க எண்கள் இருக்கும். பின்கோடு அமைப்பு 1972 ஆக.15ல் நடைமுறைக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: