பல வண்ண நம்பர் பிளேட்டுக்கான காரணம் என்ன தெரியுமா....?

வாகனங்களின்  தனித்துவ அடையாளமாக நம்பர் பிளேட் உள்ளது. வாகனங்களை இனங்காணுதலில் உள்ள  சிரமங்களை குறைக்க இதுபோன்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு  வெறும் எண் போல தெரிந்தாலும் இதில் பல்வேறு நுணுக்கங்கள்  கையாளப்படுகின்றன. அந்தந்த மாநிலத்தை குறிக்கும் வகையில் முதல்  எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். உதாரணமாக நம் மாநிலத்திற்கு TN  என்று துவங்கும். பின்பு அந்தந்த ஆர்டிஓ.அலுவலக எண் வரும்.

Advertising
Advertising

உதாரணமாக  திண்டுக்கல்லைப் பொறுத்தளவில் 57, மதுரை தெற்கு 58,  பெரியகுளத்திற்கு (தேனி) 60 என்று இருக்கும். அதனைத் தொடர்ந்து Aல் துவங்கி  1,2,3 என்று 9999 வரை ஒவ்வொரு வாகனத்திற்கும் நம்பர் வழங்கப்படும். பின்பு  AA, AB என்று துவங்கி AZ வரை 1 முதல் 9999 வரை நம்பர்கள் அளிக்கப்படும். என்றைக்கு  ZZ 9999 நம்பர் வருகிறதோ, அதன் பின்பு ஆர்டிஓ. அலுவலக எண் மாற்றப்பட்டு  முன்பு போல Aல் இருந்து மீண்டும் பதிவுகள் துவங்கும். அரசு பேருந்துகளைப் பொறுத்தளவில் TN 57க்குப் பிறகு N என்ற ஆங்கில எழுத்து மட்டுமே பயன்படுத்தி நம்பர்கள் வழங்கப்படுகிறது.

இப்போது நம்பர் பிளேட்களின் வகைகளைப் பார்ப்போம்.

வெள்ளைப் பின்னணியில்  கருப்பு எழுத்தில் நம்பர்கள் எழுதப்பட்டிருந்தால் அது சொந்த  பயன்பாட்டிற்கான வாகனம். பயணிகளையோ, பொருட்களையோ அதில் ஏற்றக் கூடாது. இதேபோல் மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்தில் நம்பர் எழுதப்பட்டிருந்தால்  அது வாடகை வாகனம். ஆட்டோ, டாக்சி, லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களைச்  சொல்லலாம். நீலக் கலர் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் உள்ள  வாகனங்கள் வெளிநாட்டு தூதர்களுக்கான வாகனம். டில்லி போன்ற இடங்களில் இதுபோன்ற வண்டிகளை அதிகம் பார்க்கலாம். கறுப்பு பின்னணியில் மஞ்சள் வண்ண  எண்கள் இருந்தால் அது வர்த்தகத்திற்கான வாகனம். தொழிற்சாலை உள்ளிட்ட  தனிப்பட்ட தேவைக்கான வண்டி அது.

சிவப்பு கலர் பின்னணியில் வெள்ளை  அல்லது கோல்டன் கலரில் நம்பர்கள் எழுதி இருந்தால் அது ஜனாதிபதி, கவர்னர்  போன்ற உயர் அரசு பதவியில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வாகனம். சில  வாகனங்களின் எண்களுக்கு முன்னதாக மேல்நோக்கிய அம்புக்குறியும்  வழக்கத்திற்கு மாறான எண்களுடனும் காணப்படும். இந்த வகை வாகனங்கள்  ராணுவத்திற்குச் சொந்தமானது. என்சிசி உள்ளிட்ட துறைகளிலும் இதுபோன்ற நம்பர்  பிளேட்கள் பயன்படுத்தப்படுகிறது. சரி. ஒரு வண்டியின் நம்பரை வைத்து  அது எந்த ஊரில் பதிவு செய்யப்பட்டது. உரிமையாளர்யார், அது எந்தவகையான  வாகனம் என்பதை கண்டுபிடிக்க முடியுமா..? முடியும்.

இதற்காக உங்கள்  மொபைலில் உள்ள பிளே ஸ்டோர் மூலம் VAHAN REGISTRATION DETAILS ஐ கிளிக்  செய்து RTO VEHICLE INFORMATION எனும் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.  பின்பு இதை கிளிக் செய்து சர்ச் எனும் இடத்தை கிளிக் செய்து நம்பரை  பதிவிட்டால் விபரங்கள் கொட்டும். உரிமையாளர் பெயர், கார், டூவீலர்  போன்ற எந்த வகையான வாகனம், பெட்ரோல், டீசலில் இயங்குகிறதா, என்ன கலர்,  எத்தனையாவது உரிமையாளர், சிசி. எவ்வளவு உள்ளிட்ட பல தகவல்கள் வரும். இதை  அப்படியே மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்பிற்கு அனுப்பும் வசதியும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு ஊரிலும் பெட்ரோல், டீசல் விலை, பிரபலங்கள் வைத்துள்ள கார் வகை உள்ளிட்ட பல தகவல்களும் இந்த செயலியில் உண்டு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: