சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி 2000 தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் : பட்டாசு தொழிலுக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் விதியில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு தயாரிப்பிற்கான மூல பொருட்களுக்கான பேரியம், நைட்ரைட்டிற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்தது. இதையடுத்து நவம்பர் 12ம் தேதி முதல் சிவகாசியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவகாசியை அடுத்த திருத்தங்கலில் உள்ள சோனி  மைதானத்தில் 2000திற்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் சுற்றுசூழல் விதியில் இருந்து பட்டாசு தயாரிப்பிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வேலையில்லாத நாள்களுக்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடக்கிறது. இதில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு நிறுவன பணியாளர்களும் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள போராட்டம் குறித்து இன்றைய போராட்டத்தின் முடிவில் முடிவு எடுக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு