வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூ.2000 உதவித்தொகை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை : தமிழகம் முழுவதும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்தார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது.  இன்று பேரவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார். தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடைய முடியும். சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விவசாயிகள் உதவித்தொகை பெற ஜமாபந்தியில் மனு அளிக்கலாம்