டோனி 300

இந்திய அணி விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி, 300 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக  நேற்று நடந்த கடைசி போட்டி, டோனி களமிறங்கிய 300வது டி20 போட்டியாகும். உலக அளவில் அவர் இங்கிலாந்தின் லூக் ரைட்டுடன் 12வது இடத்தை  பகிர்ந்துகொண்டுள்ளார். ரோகித் ஷர்மா 298 டி20 போட்டியில் விளையாடி 13வது இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 296 போட்டியிலும், தினேஷ் கார்த்திக் 260  போட்டியிலும் விளையாடி உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டு 446 டி20 போட்டியில் விளையாடி முதலிடம் வகிக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு