டிராக்டரின் பின் சக்கரம் பெரியதாக இருப்பது ஏன்?

டிராக்டருக்கு பின்னால் இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்கள் முன் சக்கரங்களை விட மிகப்பெரியதாக இருக்கும். டிராக்டரில் உள்ள இஞ்சின் வெயிட் அதிகமாக இருக்கும். அதனால் அதனை ஈடுகட்ட பின் சக்கரங்கள் பெரியதாக இருக்கிறது. இதனால் இஞ்சினில் இருந்து வரும் ஆற்றல் பின் சக்கரங்களுக்கு எவ்வித இயந்திர இழப்பும் இன்றி சென்று உந்தித்தள்ளும். முன் சக்கரங்களை விட பின் சக்கரங்கள் நிலத்தில் அதிகளவில் தொட்டு கொண்டு இருப்பதால் வாய்க்கால், வரப்பு, சீரற்ற பாதையில் செல்லும் போது எளிதில் சாயாது.

மேலும் சேறு உள்ளிட்ட இடங்களில் புதையாது, பெரிய சக்கரம் என்பதால் நிலத்திற்கும், டிராக்டரின் கீழ் பகுதிக்கும் உள்ள இடைவெளி (க்ரவுண்ட் க்ளியரன்ஸ்) அதிகமாக இருக்கும். இதனால் வரப்புகளை தாண்டும் போது டிராக்டரின் கீழ் பாகம் உரசாது. பெரிய சக்கரம் என்பதால் குறைவான சுற்றுகளில் அதிக தூரம் கடக்க முடியும். மேலும் பின் சக்கரங்களுக்கு பின்னால் உழவு கருவிகள் உள்ளிட்ட இதர விவசாய தொழில்நுட்ப இயந்திரங்களை பொருத்தி கொள்ளவும் முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: