×

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் லாரிகளில் மூச்சுத்திணற ஏற்றப்படும் கால்நடைகள் : கண்டுகொள்ளாத கால்நடைத்துறை அதிகாரிகள்

வேலூர்: வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் கால்நடைகள் மூச்சுத்திணறும் வகையில் வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுவதை கால்நடைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டம், பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பொய்கை மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

வழக்கமாக பொய்கை மாட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள், எருது மற்றும் உழவு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்த சந்தையில் அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வருவார்கள். இதில் ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாகும். நேற்று விற்பனைக்காக 1500 மாடுகள் கொண்டு வரப்பட்டு 2 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டது. விற்பனை செய்யப்படும் கால்நடைகள் கனரக வாகனங்களில் தார்ப்பாயால் மூடப்பட்டு, கால்நடைகள் வெளியில் தெரியாதவாறு, மூச்சு திணறும் வகையில் வாகனங்களில் ஏற்றப்படுகிறது.

இவ்வாறு ஏற்றப்படும் கால்நடைகள் நெரிசலில் சிக்கி கால்கள் உடைந்தும், ஒரு சில மாடுகள் உயிரிழந்தும் உள்ளன. கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சரக்கு வாகனங்கள் போல வெளித்தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மாடுகள் இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரிகளில் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்ட 37 கால்நடைகள் மீட்கப்பட்டன.
தற்போது வேலூர் பொய்கை சந்தையில் இருந்து வாங்கப்படும் பெரும்பாலான கால்நடைகள் இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore ,livestock officers , Vellore, cow market, cattle
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...