×

காளையார்கோவில் பகுதியில் கோடைக்கு முன்பே வறண்ட குளங்கள் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

காளையார்கோவில்: காளையார்கோவில் பகுதியில், கோடைக்கு முன்பே குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள் வறண்டு கிடப்பதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  காளையார் கோவிலை சுற்றியுள்ள 43 கிராம பஞ்சாயத்துகளில், 360க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லை. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த போதும், அதில் பாதியளவு கூட இப்பகுதியில் மழை பெய்யவில்லை. இந்தாண்டும் காளையார்கோவில் பகுதியில் போதிய மழை இல்லை.

இதனால், பல ஏக்கர் நெல் விவசாயம் பாதியிலேயே கருகிவிட்டன. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, இப்பகுதியில் உள்ள கண்மாய், குளம், ஊருணி மற்றும் குட்டைகளில் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. வீடுகளில் உள்ள போர்வெல்கள், தோட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், காய்கறி, கடலை, மிளகாய், கரும்பு உள்ளிட்ட சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை நீடித்தால் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கிராமந்தோறும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள குளம் மற்றும் கண்மாய்களின் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரிமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Kalayarikavu , Kalaiyarkovil, ponds,drinking water
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...