×

திருமயம் அருகே ஜல்லிக்கட்டில் 400 காளைகள் சீறிப்பாய்ந்தன : மாடுபிடி வீரர்கள் 11 பேர் காயம்

திருமயம்: திருமயம் அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 11 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையகோயில் காளீஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் நடை பெற்றது. இதையொட்டி நேற்று ஜல்லிகட்டு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் கடந்த ஒரு வாரமாக  மாவட்ட அதிகாரிகள், திருமயம் தாசில்தார் ரமேஷ் தலைமையில் பேரிகாடு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று காலை 9மணியளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 காளைகள் பங்கேற்றன. சீறி வந்த காளைகளை அடக்க 150 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கி விடப் பட்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக் கப்பட்டனர். முதலில் உள்ளூர் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டது.

அவ்வாறு அவிழ்க்கப்பட்டு சீறிவந்த காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் காளை முட்டியதில் பார்வையாளர் 4பேர் உட்பட 11 பேர் காய மடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத் துவ குழுக்கள் முதலுதவி அளித்தனர். இதில் பலத்த காயமடைந்த 4 பேர் புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, கலெக்டர் கணேஷ், எஸ்பி செல்வராஜ், பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டு நிகழ்ச்சியை கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான ரசிகர்கள் வந்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wayanad ,Jallikottai ,soldiers ,Madappadi , Tirumayam, jallikattu, Bulls
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...