×

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்தது அதிமுக

சென்னை ; 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன. இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் எந்த கட்சி எந்த அணியில் இருக்கும் என்பது தெரியவரும். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வைக்கிறது. பிற கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட அதிமுக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இந்த குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், பெர்னார்ட் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர்.மேலும் தம்பிதுரை உள்ளிட்டோருடன் தேர்தல் பிரச்சாரத்தை நெறிப்படுத்தும் குழுவையும் அதிமுக அமைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,board ,election , The term of office, distribution, committee, AIADMK, negotiations, the KP Munusamy,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...