×

சவுதியில் கொத்தடிமைகளாக தவிக்கும் தமிழ் பெண்கள்: குடும்பத்தினருடன் சேர்க்க கோரி கண்ணீருடன் வீடியோ வெளியீடு

ரியாத்: சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற தமிழ் பெண்கள் கொத்தடிமைகளாக தவித்து வருவதாக கண்ணீருடன் கதறும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்டுக்கணக்கில் ஊதியம் இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக கூறுகின்றனர். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு ஊதியமும் கொடுக்கப்படாமல் குடும்பத்தினரை பிரிந்து சவுதியில் தவிக்கும் தங்களை மீட்கும்படி கெஞ்சும் வீடியோ பதிவு காண்பவரை கண்ணீரில் ஆழ்த்துவதாக உள்ளது.

இளம்பெண் முதல் 64 வயது மூதாட்டி வரை கொத்தடிமைகளாக உள்ள தமிழ் பெண்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் அவர்களின் ஊதியத்தை பெற்று தரவும் மத்திய அரசு சவூதி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,Tamil ,family members , Tamil womens,suffering,Slave,saudi,Video,release,family members
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்