×

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து

நேப்பியர்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 81 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய ஆணை தரப்பினல் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர். சஹால் 2 விக்கெட்டும் ஜாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஷமி வீசிய 2-வது ஓவரில் கப்தில் 5 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கினார். மீண்டும் 4 வது ஓவரில் முன்ரோ  8 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ரோஸ் டெய்லர் களமிறங்கி, வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பின்னர் ரோஸ் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்வரிசை வீர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 157  ரன்களுக்கு சுருண்டது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்ஸை விளையாடவுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand ,bowling attack ,India , The first one-day,match, New Zealand,India
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...