×

பொதுமக்கள் வாங்காத பொங்கல் பரிசு முந்திரி, திராட்சை திரும்ப பெற மறுப்பு

கோவை:  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து இதுவரை 3.7% பேர், பொங்கல் பரிசு பொருட்களான முந்திரி, திராட்சை, ஏலக்காய் வாங்கவில்லை. இந்த ெபாருட்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் ரேஷன் கடைகளுக்கு வரவில்லை. சுமார் 5 லட்சம் பாக்கெட் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டும் இதே நிலைதான் இருந்தது. முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டுகளை வழங்கல் பிரிவு, கூட்டுறவு சங்கத்தினர் திரும்ப பெறவில்லை. மாறாக அதற்கான தொகையை ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் வாங்கி விட்டார்கள்.

இப்போதும் அதே நிலை ஏற்படுமோ என விற்பனையாளர்கள் தவிப்பில் உள்ளனர். பொதுமக்கள் வாங்காத முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை ரேஷன் பணியாளர்கள் வெளிசந்தையில் விற்கவேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஏலக்காய், திராட்சை, முந்திரி என மூன்று பாக்கெட்டுக்கு 50 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் இருந்த பொங்கல் பரிசு தொகையை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதேபோல் பொங்கல் பரிசு பொருட்களையும் ஒப்படைக்க அனுமதி தரவேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Civilians, pongal gifts, cashews, grapes
× RELATED சொல்லிட்டாங்க…