×

ஸ்டிரைக்கிற்கு அரசு தீர்வு காண வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான காரணம். போராட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதால் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, இப்போராட்டத்தை அரசு தவிர்க்கச் செய்திருக்கலாம்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான். ஒரு மாதத்தில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை அரசு அழைத்துப் பேசி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramadoss ,government ,strike , Strike, Government Solution, Ramadoss
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...