×

பட்டாசு வழக்கு 29-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: பட்டாசு வெடிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளி மற்றும் சமூகம் சார்ந்த பண்டிகைகளின் போது மாலை 8 மணி முதல் 10 மணி வரையும், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடலாம் என கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, மேற்கண்ட வழக்கு கடந்த மாதம் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இறுதி விசாரணை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, 29ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fireworks case, welfare case, environment
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி