×

மக்களவை தேர்தலில் வாக்குசீட்டு முறை தேவை - மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ: ‘‘மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குசீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்’’ என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகதன்மை இல்லாதவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சமீபத்திய சர்ச்சைகள்  மின்னணு இயந்திரங்கள் மீதான சந்தேகத்தை மேலும் கடுமையாக்குகிறது. இதுபோன்ற சூழலில் வருகிற மக்களவை தேர்தலில் வாக்குசீட்டுக்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சமீபத்திய வெளிபாடுகள் பாஜ.வின் சதியை அம்பலப்படுத்தி உள்ளன.  
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய முதல் கட்சி பகுஜன் சமாஜ்தான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mayawati ,voting ,elections ,Lok Sabha , Voting system, Mayawati's assertion, Lok Sabha polls
× RELATED மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம்