×

பெண் குழந்தை திட்ட நிதியில் 56% விளம்பரத்துக்கு செலவு- மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ திட்டத்துக்கு செய்த விளம்பரங்களின் மூலம் மோடி தன்னை பாதுகாத்து கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.பெண்களை குழந்தைகளை பாதுகாக்கும், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ (பேட்டி பச்சாவோ; பேட்டி படாவோ) என்ற திட்டத்தை 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. இது, பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான கனவு திட்டமாகும். இதை இதை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 56 சதவீதம், இத்திட்டத்தின் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடப்பட்டு இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த பத்திரிகை செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதனுடன் ‘மோடி பச்சாவோ; அட்வர்டைஸ்மென்ட் சலாவோ’ என்ற கருத்தையும் இந்தியில் தெரிவித்துள்ளார். இதற்கு, ‘மோடியை காப்போம்; விளம்பரத்தை போடுவோம்’ என்று அர்த்தமாகும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,Modi , Modi, Rahul's allegation, woman child project funding
× RELATED நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு...